Farming
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் – 21 வியபாரிகள் பங்கேற்பு
SimpliCity News Team · 13 Aug 2023
திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில்அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 7842 ரூபாய்க்கு விற்பனையானது.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 739 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 7842ற்கும் குறைந்தபட்ச விலை ரூபாய் 6650ற்கும் சராசரி விலை ரூ 7350ற்கும் விற்பனையானது.
பருத்தியின் மொத்த அளவு 8747 மூட்டைகள், குவிண்டால் 2701.26 மதிப்பு ரூபாய் 1,96,96,097/- ஏலத்தில் 21 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்துகொடுத்தார்.